உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்

'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால் போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை நம்பி இருக்கின்றன. பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால் கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன. அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து வருகிறார் டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...


பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில், 45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது. சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில், எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு. பின், மருத்துவம் படித்தேன்.

ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார். அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது. ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று, பசுக்களை வளர்த்து வருகிறேன்.